Mylai Thiruvalluvar Tamizh Sangam

Welcome To

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

((வானவில் மனித வள மேம்பாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்))

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் என்னும் உயரிய நோக்கில், அறிவியலையும் மொழியியலையும் இரு கண்காளாகக் கொண்டு, மனித வளத்தை மூலதனமாக்கி நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்னும் தொலை நோக்குடன் 35 ஆண்டுகளாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வருமான வரி விலக்குப் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்!

1986 முதல் 1996 வரை 10 ஆண்டுகள் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை நிலைக் களனாகக் கொண்டு, திருக்குறள் சிந்தனை அரங்கம், திருக்குறள் விளக்க அரங்கம், திருக்குறள் இலவச வகுப்பு, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் முதலானவற்றை நிகழ்த்தியது.

திருவள்ளுவர் திருக்கோயிலில் 133 மரக்கன்றுகளை நட்டு உழவாரப் பணி புரிந்துள்ளது. ஆண்டுதோறும் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெரு விழாவின் தேர்த் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் பெரு விழாவில் இலவச மருத்துவ முகாம்கள் இருபதுக்கும் மேல் நிகழ்த்தியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

நீதிபதி மாண்புமிகு டாக்டர் ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள். நிறுவனச் செயலர் கலைமாமணி டாக்டர் சேயோன்.

1986 முதல் 1996 வரை 10 ஆண்டுகள் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை நிலைக் களனாகக் கொண்டு, திருக்குறள் சிந்தனை அரங்கம், திருக்குறள் விளக்க அரங்கம், திருக்குறள் இலவச வகுப்பு, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் முதலானவற்றை நிகழ்த்தியது. இதன் மூலம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அதே போல் அறிவியல் வினாடி-வினாவை நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நிகழ்த்தி வெற்றி மாணவர்களுக்கு அறிவியல் களஞ்சியம் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தது.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, அறிவியல் வினாடி வினாப் போட்டிகளைத் தமிழ் நாடு முழுவதும் நடத்தி மாநில அளவில் பரிசுகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் 133 அதிகாரங்களில் உள்ள திருக்குறளை 133 இராகங்களில் இசையமைத்து விளக்கத்துடன் திருக்குறள் இசைச் சொல்லோவியம் குறுந்தகட்டினை வெளியிட்டிருப்பது இந்தச் சங்கத்தின் இன்றியமையாச் சாதனை என்றே கூறவேண்டும். 2000, 2004, 2006, 2016, 2020 ஆண்டு விழா மலர்களை வெளியிட்டுள்ளோம் என்பதும் குறிப்பிடத் தக்கது

எங்கள் செயல்பாடுகள்

Thirukkural Competitions, Classes and Medical Camp Teaching of Tamil Spoken Word for non-Tamils and foreigners.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் ஆக இணைய

நீங்கள் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விரும்பினால், இணைய வழி நீங்கள் இணையலாம். இங்கு கொடுக்க பட்டுள்ள கூகிள் படிமத்தை பூர்த்தி செய்யவும்.

கூகிள் படிமம் இங்கே சொடுக்கவும்