Welcome To
M.T.S. Academy
((வானவில் மனித வள மேம்பாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்))
குழந்தைகள், இளைஞர்களின் தேவையை மனதிற்கொண்டு, எம்.டி.எஸ். அகாடெமி (M.T.S. Academy) 1997-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7-ஆம் நாள் நிறுவியது.
M. – Mylai Motivation
T. – Thiruvalluvar Tamil Training
S. – Sangam (Academy) Success
இந்த அகாடெமி மூலம் தமிழ் நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், அறிவியல் நகரம், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் முதலானவற்றுடன் இணைந்து, அறிவியல் வினாடி வினா, அறிவியல் கண்காட்சி, அறிவியல் பயிலரங்கம், திருக்குறள் வினாடி வினா, ஆளுமை வளர்ச்சிப் பயிலரங்கம், ஆங்கிலப் பேச்சு மொழிப் பயிற்சி முதலானவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தினோம். தமிழ் நாடு முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து 5 ஆண்டுகள் போட்டிகளை நடத்தி அறிவுக்களஞ்சியம் பரிசுகளையும், விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினோம்.