Welcome To
MTS ACADEMY
Mylai Thiruvalluvar Tamizh Sangam - மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம்
(A non-profit Tax Exempted Service Oriented Rainbow HRD, N.G.O.)
(Registered under Societies Act 27 of 1975, Regn.No.50/93, NGO Unique ID:
TN/2020/0256804)
தொலை நோக்கு :
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் என்னும் உயரிய இலக்குடன் அறிவியலையும் மொழியியலையும் இரு கண்கள் எனப் போற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெறிப்படி மனித வளத்தை மூலதனமாக்கி நாட்டுக்கு அற்பணிக்க வேண்டும் என்னும் உயரிய தொலை நோக்குடன் செயல்படும் இந்திய அரசின் வருமான வரி விலக்குப் பெற்ற, மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் பதிவுபெற்ற வானவில் மனித வளமேம்பாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்!
Know More →செயல் நெறி :
1. கிராமப்புற இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளித்துப் பணி அமர்த்துதல்.
2. இளைஞர், மகளிர்க்கான தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி அளித்து
நெறிப்படுத்தல்.
3. மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, வாழ்க்கைக் கல்வி, மகளிர்
மேலாண்மைத் திறம் வளர்த்தல்.
4. குழந்தைகள், இளைஞர், மகளிர், முதியோர்க்கான அறிவுக் களஞ்சியம் விருதுப்
போட்டிகளை நடத்தி அவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தல்.
5. இளைஞர்களுக்கான அறிவியல் தெரிவிப்பியல் பயிற்சி, பல்லூடக விழிப்புணர்வு அளித்து
அறிவியல் தொழில் நுட்ப அறிவை வளர்த்தல்.
6. சமூக, பொருளாதார, கலை, பண்பாட்டு விழிப்புணர்வை வளர்த்து, உடல் நலமும், மன
வளமும் மிக்கவர்களாக வாழ வழிகாட்டுதல்.
7. சமூக, பொருளாதார, கலை, பண்பாட்டு விழிப்புணர்வை வளர்த்து, உடல் நலமும், மன
வளமும் மிக்கவர்களாக வாழ வழிகாட்டுதல்.